வயநாடு: திரும்பும் திசையெல்லாம் ருத்ரதாண்டவமாடி அனைத்தையும் அடித்துச் சென்ற நிலச்சரிவின் பாதிப்பால் கலங்கிக் கிடக்கிறது வயநாடு. இந்தப் பெருந்துயரத்துக்கு நடுவே தடுமாறி விழும்போது தாங்கிப் பிடிக்கும் முகமறியாதவரின் கரமென பாதிக்கப்பட்டவர்களின் வலிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது அரசுப் பள்ளி மாணவர்களின் தன்னார்வத் தொண்டு.
கடுமையான நிலச்சரிவு பாதிப்பைச் சந்தித்துள்ள மேப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் ஓய்வின்றி, நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் பொருள்கள் வழங்குவது எனத் தன்னார்வத் தொண்டாற்றி வருகின்றனர். அந்த தன்னார்வத் தொண்டில் மாணவர்கள் ஈடுபட அவர்களை ஊக்குவித்து ஆசிரியர்களும் பெரும் தொண்டாற்றி வருகின்றனர். மாணவர்களில் பலர் தேசிய சேவை திட்டம் (என்எஸ்எஸ்) மற்றும் தேசிய மாணவர் படை (என்சிசி)யில் அங்கம் வகிக்கிறார்கள்.
இந்தப் பெருந்துயரில் உயிர்பிழைத்தவர்கள் அதிகமான பாதிப்புகளையும் இழப்புகளையும் சந்தித்து வரும் நிலையில், மாணவர்களின் தன்னலமற்றச் சேவை பெரும் பாராட்டுக்குரியது. அவர்கள் தங்களின் உடல் உழைப்பினை மட்டும் வழங்காமல், பாதிக்கப்பட்டவர்கள் உடல் மற்றும் மனரீதியாக அப்பாதிப்புகளில் இருந்து மீண்டு வர ஆத்மார்த்தமாகவும் உதவி வருகின்றனர். மாணவத் தன்னார்வலரான அல்த்ரியா கூறுகையில், "இங்குத் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள் எங்களின் நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர். இந்த நிலச்சரிவு சம்பவத்தால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். என்றாலும் நான் இங்கு வந்து உதவுவதில் மகிழ்வடைகிறேன்" என்று தெரிவித்தார்.
நிவாரண முகாம்களில் மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள் என்பதை வலியுறுத்திப் பேசினார் ஆனந்தமேகா. அவர் கூறுகையில், "என்சிசி மற்றும் என்எஸ்எஸ்-ஐச் சேர்ந்த தன்னார்வலர்களான நாங்கள் இங்கு ஒன்றாக சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உறுதி எடுத்துள்ளோம். என்சிசி, என்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் எங்கள் பள்ளியைச் சேர்ந்த மற்ற மாணவர்களும் தன்னார்வச் சேவையாற்றி வருகின்றனர்" என்றார். மெல்பின் கூறுகையில், "இந்த நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்காக வரும் துணிகளை ஒழுங்குபடுத்தி நாங்கள் உதவி வருகிறோம்" என்றார்.
» ராகுல் குறித்து அனுராக் தாக்கூர் பேசிய பதிவை பகிர்ந்த பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
» வயநாடு நிலச்சரிவு: கேரளாவை ஜூலை 23-ம் தேதியே மத்திய அரசு எச்சரித்ததாக அமித் ஷா தகவல்
அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை மினி கூறுகையில், மக்களுக்காக எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்கிறோம். வயநாடு மக்களுக்காக நாங்கள் பிரார்த்தனைச் செய்கிறோம்" என்றார். மேலும் அவர் கூறுகையில். "இது ஒரு பெருந்துயர். நாங்கள் அனைவரும் சோகத்தில் இருக்கிறோம். எல்லோரும் இங்கே அனுமதிக்கப்படுவதில்லை. இங்கே பல கட்டுப்பாடுகள் உள்ளன. இங்கே பல உணர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் அன்பையும், பாசத்தையும் பரிமாறி அவர்களுக்கு ஆறுதல்படுத்துகிறோம். அவர்கள் எவ்வாறு மீண்டு வருவார்கள்? இதனைக் கடந்து வருவது மிக மிக கடினம்.
எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்கிறோம். இது சிறிய உதவிதான் என்றாலும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மாணவர்கள் துணிகளை ஒழுங்குபடுத்தி உதவி செய்கிறார்கள். எங்கள் மாணவர்களில் சிலரை நாங்கள் இழந்திருக்கிறோம். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. உயர்நிலைப் பள்ளியில் ஆறு அறைகள் உள்ளன, மேல்நிலைப்பள்ளியில் அதிக அறைகள் உள்ளன, சுமார் 1000-க்கும் அதிகமானோர் இங்கே இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம். கேரளாவுக்காக, வயநாடுக்காக ஒவ்வொருவரும் வேண்டிக்கொள்ளுங்கள்" என்றார்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது. இது, புதன்கிழமை மாலை 5 மணி நிலவரம். இதுவரை 225 பேரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. | வாசிக்க > வயநாடு நிலச்சரிவு பலி 194 ஆக அதிகரிப்பு: கனமழையால் மீட்புப் பணிகள் பாதிப்பு
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago