கர்நாடகாவில் நிலச்சரிவில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணிகள் தீவிரம்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் ஷக்லேஸ்புரா அருகில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய வாகனங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கர்நாடகாவில் கடந்த வாரம் அங்கோலா அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஷக்லேஸ்புரா அருகில் பெங்களூரு - மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சாலையில் சென்ற லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் மண்ணில் புதைந்தன.

வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பாதிப்பு குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனிடையே, கர்நாடக அரசு, பெங்களூரு - மஞ்களூரு தேசிய நெடுஞ்சாலையில், அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE