தாஜ்மஹாலுக்கு கங்கை புனித நீருடன் வந்த கன்வர் பக்தரை தடுத்து நிறுத்திய போலீஸார்

By செய்திப்பிரிவு

ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் தற்போது கன்வர் யாத்திரை நடைபெறுகிறது. சிவ பக்தர்கள் கங்கை நதியில் புனித நீரைஎடுத்துச் சென்று சிவாலயங்களுக்கு செல்கின்றனர். இந்நிலை யில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு, கன்வர் யாத்திரை மேற்கொண்ட மீனா ரத்தோர் என்ற பெண் பக்தர் வந்தார். அவர்கங்கை புனித நீர் கலசத்தையும் கொண்டு வந்திருந்தார். அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர், ‘‘தேஜோ மஹாலயாவுக்கு (சிவன் கோயில் இருந்ததாக கூறப்படும் தாஜ்மஹால்) கங்கை நீரை கொண்டு செல்லும்படி, சிவபெருமான் என் கனவில் வந்து கூறினார். அதனால் கன்வர் யாத்திரை மேற்கொண்டு தேஜோ மகாலாயவுக்கு புனித நீருடன் வந்தேன்’’ என கூறினார். அவரை தாஜ்மஹாலுக்குள் நுழைய பாதுகாவலர்கள் அனுமதிக்கவில்லை. அதன்பின் அந்தப் பெண் அருகில் உள்ள ராஜேஸ்வர் கோயிலுக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார் என தாஜ்மஹால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உதவி ஆணையர் அகமது தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்