48 இந்திய மாணவர்களை அனுப்பியது அமெரிக்கா: விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறித்து தெலுங்குதேசம் கட்சியைசேர்ந்த பி.கே.பார்த்தசாரதி மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் அளித்த பதில்:

கடந்த 3 ஆண்டுகளி்ல 48 இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களை அமெரிக்கா திருப்பி தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், அமெரிக்க அரசின் அதிகாரிகள் இதற்கான காரணத்தை இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளவில்லை. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அமெரிக்க அரசிடம் மத்திய அரசு கேட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு செல்வோர் பாதுகாப்பாக மற்றும் சட்டப் பூர்வமாக குடியேறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE