பட்ஜெட்டுக்கு பிறகு முதன்முறையாக தொழில் துறையினரை இன்று சந்திக்கிறார் பிரதமர்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பட்ஜெட்டுக்குப் பிறகு முதன் முறையாக தொழில்துறையைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று சந்தித்துப் பேசுகிறார்.

இதுகுறித்து பிரதமர் அலுவல கம் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘‘வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணம்: மத்தியபட்ஜெட் 2024-25’’ என்ற தலைப்பில்மாநாடு டெல்லியில் உள்ளவிஞ்ஞான் பவனில் செவ்வாய்க்கிழமை (இன்று) நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டுக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்துள்ளது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பட்ஜெட்டுக்கு பிறகுமுதன்முறையாக தொழில் துறையினரை நேரடியாக சந்தித்து உரையாட உள்ளார்.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதில் தொழில் துறையின் பங்கு என்ன என்பது குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயம், ஸ்டார்ட்அப் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தும் ஒரு வலுவானதிட்டத்தை கோடிட்டு காட்டும்வகையில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்ஜூலை 23-ம் தேதி நாடாளுமன் றத்தில் தாக்கல் செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்