புதுடெல்லி: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ்தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு, ஹமாஸுக்கு ஆதரவுஅளித்து வருகிறது. இதன் காரணமாக அந்த அமைப்பு இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இஸ்ரேலை குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா வீசியுள்ளது.
கடந்த 27-ம் தேதி இஸ்ரேலின் கோலன் குன்றுகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஒரு ராக்கெட் குண்டு கால்பந்து விளையாட்டு மைதா னத்தில் விழுந்தது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் ஆவர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பு முகாம்களை குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலைநடத்த இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டு உள்ளது. இதைத் தொடர்ந்துலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போதைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம். இதேபோல இந்தியாவில் இருந்து யாரும் லெபனான் வர வேண்டாம். அவசரஉதவி தேவைப்படுவோர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதர கத்தை தொடர்பு கொள்ளலாம்.
» ராஜஸ்தானில் உள்ள காதலனை சந்திக்க எல்லை தாண்டிய பாக். பெண்
» இந்திய - சீன எல்லை பிரச்சினையில் எந்த நாடும் தலையிடுவதை விரும்பவில்லை: அமைச்சர் ஜெய்சங்கர்
இவ்வாறு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago