புதுடெல்லி: சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் அவர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் வெளியிட்ட தகவல்: 261.70 கிமீ தொலைவுள்ள (தமிழ்நாட்டில் உள்ள 105.7 கிமீ தொலைவு உட்பட) சென்னை – பெங்களூரு விரைவுச் சாலை, ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 61.74% அளவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளது. சென்னை – பெங்களூரு விரைவுச் சாலைப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்படும். இந்தத் திட்டம் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னை – பெங்களூரு இடையேயான பயணத் தொலைவு மற்றும் நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு நான்குவழி உயர்மட்டச் சாலைத் திட்டப் பணிகள், பல்வேறு கட்டங்களாகப் பிரித்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தப் பணிகள் 2026-ம் ஆண்டு மே மாதத்துக்குள் முடிக்கப்படும். சென்னை – ராணிப்பேட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீபெரும்புதூர் – காரைப்பேட்டை மற்றும் காரைப்பேட்டை – வாலாஜாப்பேட்டை என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதூர் பணிகள் 98.5% முடிவடைந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் - காரைப்பேட்டை இடையிலான பணிகள் 56.92% அளவுக்கும், காரைப்பேட்டை – வாலாஜாபேட்டை பணிகள் 74.90% அளவுக்கும் முடிவடைந்துள்ளது. இந்தப் பணிகள் 2025 மார்ச் மாதத்துக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும். இது தவிர, சென்னை – திருப்பதி, மாமல்லபுரம் – முகையூர், தருமபுரி – தொரப்பள்ளி, பொள்ளாச்சி – மடத்துக்குளம், திண்டிவனம் – கிருஷ்ணகிரி, மேலூர் – காரைக்குடி, விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் – பழனி, திருமங்கலம் - வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
32 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago