திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரியான சியாமள ராவ், சில நாட்களுக்கு முன் லட்டு பிரசாதம் தயாரிக்கும்மடப்பள்ளி ஊழியர்களை அழைத்து விசாரித்தார்.
லட்டுவில் சேர்க்கப்படும் பொருட்களை கொண்டு வரச்செய்து அவற்றை ஆய்வு செய்தார். இதில் லட்டு பிரசாதத்துக்கு டெண்டர் எடுத்திருக்கும் திண்டுக்கல் ஏஆர் டயரி புட்ஸ் பிரைவேட்லிமிடெட் நிறுவனம் தரமற்றநெய்யை திருப்பதி தேவஸ்தானத்துக்கு வழங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிறுவனத்துக்கு 8.50 லட்சம் லிட்டர் நெய் வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டது. இதுவரை இந்நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய்யை அனுப்பி உள்ளது. இதில் 20 ஆயிரம் கிலோ நெய் மிகவும் தரமற்றதாக அனுப்பி வைத்தது தற்போது அம்பலமாகி உள்ளது என அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
5 நிறுவனங்கள் தேவஸ்தானத்துக்கு தரமான நெய்யை அனுப்ப டெண்டர் எடுத்துள்ளனர். இதில் ஏஆர் டயரி நிறுவனம் அனுப்பிய 20 ஆயிரம் கிலோ நெய்யில் கலப்படம் உள்ளது என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளதால் அதனை திருப்பி அனுப்பி விட்டனர்.
மேலும், இந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்ததுடன்நோட்டீஸும் அனுப்பப்பட்டுள் ளது. விரைவில் இந்நிறுவனம் மீது கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ள உள்ளோம் என நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்தார்.
» கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக சதி: அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
» வருமான வரி புதிய விகிதத்தில் ரூ.7.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை: மூத்த ஆடிட்டர்கள் தகவல்
முக்கிய செய்திகள்
இந்தியா
23 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago