“கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கு எல்லாம் தெரியவரும்” - பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால் நிதிஷ் குமார் அதிருப்தி

By செய்திப்பிரிவு

பாட்னா: பாஜக தலைமையிலான மத்திய அரசு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆகியவற்றை சார்ந்து உள்ளது. பட்ஜெட்டில் ஆந்திர முதல்வரின் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கை ஏற்கப்பட்டு, தலைநகர் அமராவதியின் வளர்ச்சி திட்டத்துக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வெற்றிக்குப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டிய ஐக்கிய ஜனதா தளம், பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால், இது பற்றிய எந்த அறிவிப்பும் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

பிஹாரின் சாலை திட்டங்கள் மற்றும் வெள்ள அபாய தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டும் ரூ.37,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

விமான நிலையம், மருத்துவக் கல்லூரி உட்பட பல வளர்ச்சி திட்டங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன.

ஆனாலும், பிஹார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து பற்றி அறிவிப்பு வெளியிடப்படாதது, ஐக்கிய ஜனதா கட்சி தலைவர்களுக்கு சற்று அதிருப்தியை அளித்தது.

இது குறித்து பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “கொஞ்சம், கொஞ்சமாக உங்களுக்கு எல்லாம் தெரியவரும்” என சிரித்துக் கொண்டே தனது பாணியில் பதில் அளித்தார்.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும்ஐக்கிய ஜனதா கட்சிக்கு 12 எம்.பிக்கள்உள்ளனர். இதில் இருவர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்