மையம் வாரியாக நீட் தேர்வு முடிவு: 11,000 மாணவர்கள் பூஜ்ஜியம் மதிப்பெண்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேசிய தேர்வு முகமை (என்டிஏ), நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் வாரியாக கடந்த சனிக் கிழமை வெளியிட்டது.

நீட் தேர்வில் கேள்விக்கு தவறாக விடையளிக்கும் மாணவர்களுக்கு எதிர்மறை மதிப்பெண் அதாவது நெகடிவ் மார்க் வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் 11,000-க்கும் அதிக மான மாணவர்கள் பூஜ்ஜியம் அல்லது அதற்கும் குறைவாக நெகடிவ் மார்க்கை பெற்றுள்ளனர்.

குறிப்பாக, பிஹாரில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் மிகவும் குறைந்தபட்சமாக ஒரு மாணவர் மைனஸ் 180 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு சரியான பதிலுக்கு 4 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதேநேரம், தவறான பதிலுக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். முயற்சிக்கப்படாத கேள்விகளுக்கு எந்தமதிப்பெண்ணும் குறைக்கப்படுவது அல்லது வழங்கப்படுவது இல்லை.

பிரபல பயிற்சி மையங்களில் ஒன்றான ராஜஸ்தானின் சிகாரில் உள்ள மையங்களில் 2,000 பேர் 650 மதிப்பெண்களுக்கும் அதிகமாக பெற்றுள்ளனர். மேலும், 4,000 பேர் 600 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றுள்ளனர்.

நீட் தேர்வை கடந்த 5-ம் தேதி 24 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இதில், முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில் அது தொடர்பான பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE