நீட் உள்ளிட்ட தேர்வு முறையில் தீவிர பிரச்சினை நிலவுகிறது: மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது ராகுல் காந்தி பேசியதாவது:

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பது நாடு முழுவதும் அறிந்த செய்தியாக உள்ளது. ஆனால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த பிரச்சினைகளுக்கு தன்னைத் தவிர மற்ற அனைவர் மீதும் குற்றம்சாட்டி வருகிறார்.

நாட்டில் உள்ள லட்சக்கணக் கான மாணவர்கள் இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்ற கவலையுடன் உள்ளனர். இந்தியாவின் தேர்வு முறை என்பதே மோசடியானது என்று அவர்கள் நம்பத் தொடங்கி யுள்ளனர்.

நீங்கள் பணக்காரராகவும் உங்களிடம் அதிக பணமும் இருந்தால் இந்தியாவின் தேர்வு அமைப்பை விலைக்கு வாங்கிவிடலாம் என்று மக்கள் தற்போது கருதுகின்றனர். அதையே எதிர்த்தரப்பில் உள்ள நாங்களும் கருதுகிறோம்.

நீட் மட்டுமல்ல, அனைத்து முக்கிய போட்டித் தேர்வுகளிலும், தேர்வு முறைகளில் சிக்கல் உள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

இதையடுத்து விவாதங்களுக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தேர்வு முடிவுகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முறைகேட்டை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால், உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது எத்தனை முறை வினாத்தாள் முறைகேடு நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டு மொத்த பாஜக அரசும் அதற்கு பொறுப்பேற்கும். தற்போது நடந்த சிறு பிழைகள் கூட இனி நடக்காது என மத்திய அரசு உறுதியளிக்கிறது.

நீட் முறைகேடு தொடர்பாக தொடர்ந்து முறையான விசாரணைநடைபெற்று வருகிறது. மக்களவையில் நீங்கள் கோஷம் எழுப்புவதால் அது உண்மையாகிவிடாது. இவ்வாறு தர்மேந்திர பிரதான் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்