“மக்கள் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம்” - மாநிலங்களவையில் ஜக்தீப் தன்கர் உரை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம் என்று மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.

மாநிலங்களவையின் 265-வது கூட்டத் தொடரில் ஜக்தீப் தன்கர் ஆற்றிய தொடக்க உரை: “ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் பட்ஜெட்டை பரிசீலிப்பதற்காக மாநிலங்களவையின் 265 வது கூட்டத்தொடரான இந்தக் கூட்டத்தொடர் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு தேசத்திற்கு சேவை செய்வதாக உறுதியளித்து, மிதமான உரைகள் மூலம் முன்னோக்கிச் செல்லும் அரசியல் பாதையை அளவீடு செய்வதற்கு இந்த மதிப்புமிக்க அவை, தேசத்தை முன்னுதாரணமாக வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன்.

நமது அரசியலில் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் வெளியில் உள்ள சட்டமன்றங்களுக்கு உந்துதலாக இருக்கும் நாடாளுமன்ற மரபுகளின் புனிதத்தன்மை, நேர்மை மற்றும் நெறிமுறைகளின் மிக உயர்ந்த தரங்களை இந்த அவை பிரதிபலிக்க வேண்டும். உலகம் நம்மை உற்றுப் பார்க்கிறது; அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழ்வோம்.

இந்த அவையின் நடவடிக்கைகள், தேச நலனுக்காக நேரத்தை உகந்த முறையில் பயன்படுத்தி, வளமான மற்றும் தகவலறிந்த விவாதங்களாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 'உரையாடல், கலந்துரையாடல் மற்றும் விவாதம்' என்ற கொள்கைகளை உயர்த்திப் பிடிப்போம். வலுவான நாடாளுமன்ற செயல்முறைக்கு உகந்த சூழலை வளர்ப்போம். தேசத்தின் முன் ஒரு முன்மாதிரியாக இருப்போம்.

மற்றொரு முக்கியமான அம்சத்தை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். சில நேரங்களில் உறுப்பினர்களின் கடிதங்கள் உரிய முகவரியைச் சென்றடைவதற்கு முன்பே, பொது களத்திற்கு வழிவகுக்கின்றன. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் இந்தப் பொருத்தமற்ற நடைமுறை, சிறந்த முறையில் தவிர்க்கப்பட வேண்டும். இந்தியாவைத் தாண்டி நம்மால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. பாகுபாடுகளைப் புறந்தள்ளி தேசம் முதலில் என்ற குறிக்கோளைச் செயல்படுத்த முன்னுரிமை அளிப்போம். இதனைத் தொடங்குவதற்கு இந்த ஜனநாயக ஆலயத்தை விட சிறந்த இடம் எதுவுமில்லை. நமது மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி ஏற்போம்”
என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்