கேதார்நாத் நிலச்சரிவில் 3 பக்தர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தராகண்டில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி கோயில்களுக்கு செல்வதற்கான சார்தாம் யாத்திரை கடந்த மே 10-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ருத்ரபிரயாக் மாவட்டம் கவுரிகுந்த்-கேதார்நாத் மலைப்பாதையில் சிர்பசா பகுதிக்கு அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போதுகேதார்நாத் கோயிலுக்கு சென்ற3 பேர் இடிபாடுகளில் சிக்கிஉயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மாவட்ட பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்