புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை அவரது எக்ஸ் பக்கத்தில் 100.1 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் உலகத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பிற அரசியல் தலைவர்களின் ஃபாலோயர்ஸை ஒப்பிடும்போது பிரதமர் மோடியை பின் தொடர்வோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை பின்தொடருவோர் எண்ணிக்கை கடந்த ஜூலை 14 ஆம் தேதி 10 கோடியை தாண்டியுள்ளது.
இதையடுத்து எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். கடந்த 2009 ஆம் ஆண்டு பிரதமர் மோடி,எக்ஸ் தளத்தில் கணக்கை தொடங்கினார். இந்நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில், “உலகில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர் ஆனதற்கு வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி” என்று தெரிவித்துள்ளார்.
உலக தலைவர்களில் அதிகபட்சமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 3.81 கோடி பாலோயர்களுடனும், துருக்கி அதிபர் எடோகன் 2.15 கோடி பாலோயர்களுடனும் உள்ளனர். உலக அளவில் எக்ஸ் தளத்தில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட பிரபலங்கள் வரிசையில் மோடி 7வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago