கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்புகிறது

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான‌ குடகு, மைசூரு, ஷிமோகா, மண்டியா ஆகியஇடங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, மண்டியாவில் உள்ள‌ கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 120.15 அடியாக உயர்ந்துள்ளது. அணை முழுவது மாக நிரம்புவதற்கு இன்னும் 4 அடிகளே இருப்ப தால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எப்போதுவேண்டுமானாலும் அணையில் இருந்து நீரை திறந்துவிட வாய்ப்பு உள்ளது.

வயநாட்டில் கனமழை பெய்துவருவதால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை 7 மணிக்கு வினாடிக்கு 55,750 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால்19.52 டிஎம்சி முழு கொள்ளளவைக் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 19.40 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 75,800 கன அடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்தும் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட வாய்ப்பு இருப்பதால், காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்