இந்திய பின்னணி குரல் கொடுப்போரின் திறன் மேம்பாட்டுக்கான ‘தி வாய்ஸ் பாக்ஸ்’ திட்டம்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனமான தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், இந்தியாவில் உள்ள பின்னணி குரல் கொடுப்போரின் திறன் மேம்பாட்டுக்கான ‘தி வாய்ஸ் பாக்ஸ்’ என்ற திட்டத்தை நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தவுள்ளது.

இந்தத் திட்டத்தின் தொடக்க விழாவில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் சஞ்சய் ஜாஜூ, இணைச் செயலாளர் (திரைப்படம்) பிருந்தா தேசாய், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சட்டப்பிரிவு இயக்குநர் ஆதித்யா குட்டி, கொள்கை பிரிவு தலைவர் ஃப்ரெட்டி சோம்ஸ் மற்றும் பேர்ல் அகாடமி தலைவர் சரத் மெஹ்ரா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுடெல்லியில் உள்ள சாஸ்திரி பவனில் வியாழக்கிழமை கையெழுத்தானது. தேசிய திரைப்பட வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநர் பிரித்துல் குமார், தகவல் ஒலிபரப்புத்துறை இணைச் செயலாளர் மற்றும் நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதுநிலை இயக்குநர் கிரண் தேசாய் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

தி வாய்ஸ் பாக்ஸ் திட்டம், பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்கூட்டியே கற்றறியும் வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்