பாரதிய ஜனதா கட்சியை புறக்கணியுங்கள்: கர்நாடக வாழ் தெலுங்கர்களுக்கு சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்

By என்.மகேஷ் குமார்

‘பாஜகவை புறக்கணியுங்கள்’ என்று கர்நாடக வாழ் தெலுங்கர்களுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆந்திர மாநிலத்தை ஒரு வரைமுறையின்றி காங்கிரஸ் பிரித்தது. இதற்காக, காங்கிரஸ் கட்சிக்கு ஆந்திர மக்கள் இங்கு சரியான பாடம் கற்பித்தனர். இந்த நிலையில், மாநிலப் பிரிவினை மசோதாவில் உள்ள அனைத்து அம்சங்களையும் ஆந்திராவில் அமல்படுத்துவோம் என மத்திய பாஜக அரசு உறுதி அளித்தது. ஆனால், அவற்றை பாஜக நிறைவேற்றாமல் ஆந்திராவுக்கு பாஜக துரோகம் இழைத்துவிட்டது.

ஆந்திராவில் நடைபெற உள்ள தேர்தலில், வேறு கட்சியுடன் கூட்டணி வைத்து களம் காண பாஜக முயற்சி செய்து வருகிறது. இதனை முறியடிக்க வேண்டும். வரும் 12- ம் தேதி கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜகவை அம்மாநிலத்தில் வசிக்கும் தெலுங்கு மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்