கர்நாடக முன்னாள் அமைச்சர் கைது

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடக வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.187.3கோடி கொள்ளையடிக்கப்பட்ட தாக புகார் எழுந்தது.

இந்த ஊழலுக்கு உதவாததால் ஆண யத்தின் கண்காணிப்பாளர் சந்திரசேகரனுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதால் கடந்த மே மாதம் அவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநாபா, தலைமை கணக்காளர் பரசுராம், யூனியன் வங்கியின் எம்ஜி சாலை கிளை மேலாளர் சுஷ்சிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கர்நாடக பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து நடந்த சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை ரூ.14.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நாகேந்திராவை பெல்லாரியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்து நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். பின்னர் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE