அமராவதி: ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 2014-19 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது செயலர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள் உட்பட அரசு உயர் அதிகாரிகளுக்கென்று தனி கட்டிடங்களை கட்டும் பணியை மேற்கொண்டது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து, அந்தக் கட்டிடப் பணிகள் பாதியிலேயே கைவிடப்பட்டன.
தற்போது தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், கைவிடப்பட்ட அந்தக் கட்டிடங்களை நிறைவு செய்ய சந்திரபாபு நாயுடு அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னால், அக்கட்டிடங்களின் தன்மையை ஐஐடி மெட்ராஸ் மற்றும் ஐஐடி ஹைதராபாத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழு மூலம் சோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஐஐடி மெட்ராஸ் குழு, அமராவதி அரசு வளாகத்தில் உள்ள கட்டிடங்களின் உறுதித் தன்மையை சோதனை செய்யும் என்றும் ஐஐடி ஹைதராபாத் குழு எம்எல்ஏ, எம்எல்சி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கட்டிடங்களை ஆராயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago