மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்ததால் ஸ்ட்ரெச்சரில் வெளியே வந்த மருத்துவ கல்லூரி முதல்வர்

By செய்திப்பிரிவு

ஷாஜஹான்பூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

இந்நிலையில், அம்மாநிலத்தில் ஷாஜஹான்பூரில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றின் முதல்வர் ஸ்ட்ரெச்சரில் அமர்ந்திருக்க அவரை சக ஊழியர்கள் நான்கு பேர் பத்திரமாக அழைத்துவரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மக்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் நிலையில், மருத்துவக் கல்லூரி முதல்வரோ தன் ஆடை மழை நீரில் நனையக் கூடாது என்பதற்காக ஸ்ட்ரெச்சரில் அமர்ந்து வருகிறார் என்று பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு அம்முதல்வர் பதிலளித்துள்ளார். ”நான் ஸ்ட்ரெச்சரில் அமர்ந்திருக்க என்னை வெள்ளத்துக்கு மத்தியில் ஊழியர்கள் பத்திரமாக அழைத்துச் செல்வும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ யதார்த்தத்துக்கு புறம்பானதை சித்தரிக்கிறது.

ஷாஜஹான்பூர் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் மருத்துவமனைக் கல்லூரியை வெள்ளம் சூழந்தது. 300நோயாளிகள், ஊழியர்கள் உள்ளேசிக்கினர். அவர்கள் அனைவரையும் நாங்கள் ஆம்புலன்ஸ் மூலமும் பேருந்து மூலமும் பத்திரமாக மீட்டோம். நானும் ஆம்புலன்ஸில் ஏற நினைத்தேன்.

என்னுடைய காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தவிர, நான் நீரிழிவு நோயாளி. இதனால், என்னால் அந்த வெள்ளத்தில் ஆம்புலன்ஸ் வரையில் நடக்க முடியவில்லை. இதுகுறித்து சக ஊழியர்களிடம் பகிர்ந்தேன். அவர்கள் என்னை ஸ்ட்ரெச்சர் மூலம் அழைத்துச் செல்வதாக கூறினர்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்