கர்நாடக பாஜக எம்.பி. விருந்தில் மது விநியோகம்: சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகி சர்ச்சை

By இரா.வினோத்


பெங்களூரு: அண்மையில் முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் உள்ள சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் சுதாகர் வெற்றி பெற்றார். இதனால் உற்சாகம் அடைந்த அவர் தனது ஆதரவாளர்களுக்கு நேற்று முன்தினம் நெலமங்களாவில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

பாஜக எம்.பி. சுதாகரின் குடும்பத் தின‌ருடன் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக, மஜத பிரமுகர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தொண்டர்களுக்கு பீர், ரம், விஸ்கி போன்ற மதுபான வகைகள் தாரா ளமாக விநியோகிக்கப்பட்டன. ஆயிரக் கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கினர். நெலமங்களா பாஜக செயலாளர் ஜெகதீஷ் சவுத்ரி அங்குள்ள‌ காவல் நிலையத்தில் மது விருந்துக்காக எழுத் துப்பூர்வமாக அனுமதி வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்க‌து.

இந்த நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE