கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கர்நாடக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்ளிட்ட இடங்களில் இரவில் விடிய விடியகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் காவிரிஆற்றிலும் கன்னிகா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள‌து.

குடகில் தொடரும் மழையால், மண்டியாவில் காவிரியின்குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, வினாடிக்கு 11,150 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. ஹாரங்கி அணைக்கு 2,362 கன அடிநீரும், ஹேமாவதி அணைக்கு 8,445கன அடி நீரும் வந்துகொண்டிருக்கிறது. இதேபோல மைசூருவில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 4,711கன அடி நீர் வருவதாக காவிரிநீர்ப்பாசன கழகம் தெரிவித்துள் ளது. கிருஷ்ண ராஜசாகர், கபினி,ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்