நாட்டை உலுக்கிய 8 வயது சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை உச்ச நீதிமன்றம் பதான்கோட்டுக்கு மாற்றியுள்ளது. சிபிஐ விசாரணை இல்லை.
சிறுமியின் குடும்பத்தார் கோரிக்கைக்கு ஏற்ப வழக்கு பதான்கோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது, குடும்பத்தின் வழக்கறிஞர் ஜம்மு கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது வழக்கறிஞர்களிடமிருந்து கடும் இடையூறு எழுந்தது சுட்டிக்காட்டப்பட்டது.
ஜம்மு வழக்கறிஞர்கள் கோரிய சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.
பதான்கோட்டில் விசாரணை மூடிய அறையில் நடைபெறும். தினசரி நடைபெறும் ஒத்திப்போடுதல் இருக்காது.
அடுத்த விசாரணை ஜூலை 9-ம் தேதிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜம்மு காஷ்மீர் அரசு சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக...
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட சஞ்சி ராம், விஷால் ஜாங்கோத்ரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அதில் அவர்கள், ‘இந்த வழக்கை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் விசாரிக்காமல் வேறு மாநிலத்தில் விசாரிக்க வேண்டும் என்று பலியான சிறுமியின் தந்தை கோரிக்கை வைத்துள்ளார். வழக்கை சண்டீகர் மாநிலத்தில் விசாரிக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுமியின் தந்தை கருத்தில் எங்களுக்கும் உடன்பாடு இல்லை. மேலும் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வரும். சிறுமியின் தந்தை கொடுத்துள்ள மனு தொடர்பான விசாரணையில் எங்களையும் சேர்க்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை பதான்கோட்டுக்கு மாற்றியுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago