பிஹாரில் 15 நாளில் 7 பாலங்கள் இடிந்தன

By செய்திப்பிரிவு

பாட்னா: பிஹார் மாநிலத்தின் சிவன் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த பாலம் நேற்று காலை இடிந்தது. பல கிராமங்களை இணைக்கும் இந்தப் பாலம் கடந்த 1982-83-ம் ஆண்டில் கட்டப்பட்டது. அங்கு பழுது பார்க்கும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில் அந்தப் பாலம் நேற்று காலை 5 மணியளவில் இடிந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சிவன் மாவட்டத்தில் டரோண்டா பகுதியில் கடந்த மாதம் 22-ம் தேதி ஒரு பாலம் இடிந்தது. இதேபோல் பிஹாரின் மதுபானி, அராரியா, கிழக்கு சம்பரான், கிசான்கஞ்ச் ஆகிய மாவட்டங்களில் பாலங்கள் சமீபத்தில் இடிந்தன. 15 நாளில் 7 பாலங்கள்இடிந்ததால், இதுகுறித்து ஆய்வு நடத்த உயர்நிலைக் குழுவை பிஹார் அரசு அமைத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்