தன் பாலின சேர்க்கை வழக்கில் சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு ஜூலை 18 வரை காவல்

By இரா.வினோத்


பெங்களூரு: கர்நாடகாவில் முன்னாள் பிரதமர்தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது மஜதவை சேர்ந்த 2 இளைஞர்கள் தன்பாலின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஹொலெநர்சிப்புரா போலீஸார் அவரை கைது செய்தனர்.

பிரஜ்வல் ரேவண்ணா வழக்கைவிசாரிக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரே இவரிடமும் விசாரணைநடத்தினர். சூரஜ் ரேவண்ணாவின் போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, 42-வது பெருநகர கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது போலீஸார் தரப்பில் மேலும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜூலை 18-ம் தேதிவரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதையடுத்து சூரஜ் ரேவண்ணா பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதேசிறையில்தான் பிரஜ்வல் ரேவண்ணா, கொலை வழக்கில்கைதான நடிகர் தர்ஷன் ஆகியோரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்