திருப்பதியில் கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவம்; தேரில் பவனி வந்த கோவிந்தராஜர்

By என்.மகேஷ் குமார்

திருப்பதி கோவிந்தராஜர் கோயில் பிரம்மோற்சவ விழாவில், நேற்று, உற்சவமூர்த்தி தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில், தினந்தோறும், காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும், உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில், 8-ம் நாளான நேற்று காலையில் உற்சவ மூர்த்தியான கோவிந்தராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக தேரில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தும், மிளகு, உப்பு ஆகியவற்றை தூவியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இவ்விழாவையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவின் நிறைவு நாளான இன்று சக்கர ஸ்நானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்