இரு மாநில பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண்போம்: ரேவந்த் ரெட்டிக்கு சந்திரபாபு அழைப்பு

By என்.மகேஷ்குமார்


அமராவதி: ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத் தில் இருந்து 10 மாவட்டங்களை கொண்ட தனி மாநிலமாகதெலங்கானா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிக்கப்பட்டது. இரு மாநிலங்களுக்கும் ஹைதரா பாத் 10 ஆண்டுகளுக்கு பொது தலைநகரமாக இருக்கும் எனவும் அதன் பிறகு அந்த நகரம் தெலங்கானாவின் தலைநகரமாக மட்டுமே விளங்கும் எனவும் மாநிலப் பிரிவினை மசோதாவில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி ஹைதராபாத் நகரின் மீது முழு உரிமை தற்போது தெலங்கானாவுக்கு வந்துள்ளது. இதுபோல் அரசு ஊழியர்கள் பங்கீடு, நதிநீர் பங்கீடு, மின்சாரம் பங்கீடு என இரு மாநிலங்களுக்கு இடையே பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இவை அனைத்தும் ஓரளவு தீர்க்கப்பட்ட நிலையில், கிருஷ்ணா நதி நீர் பிரச்சினை மட்டும் இன்னமும் முழுவதுமாக தீர்க்கப்படாமல் உள்ளது.

இதேபோன்று, கம்மம் மாவட்டத்தில் 7 மண்டலங்கள் தெலங்கானாவில் இணைக்கப்பட வேண்டும் என தெலங்கானா அரசு கேட்டுக்கொண்டே உள்ளது. ஆனால் ஆந்திர அரசு இதனை ஏற்பதாக இல்லை. இந்தப் பிரச்சினையும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நமது இரு மாநிலங்களுக்கு இடையிலான அனைத்து பிரச்சினைகளையும் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம். வரும் 6-ம் தேதி ஹைதராபாத்தில் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்யவும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். சந்திரபாபுவின் இந்த நடவடிக்கையை அரசியல் வட்டாரங்கள் வரவேற்றுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

56 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்