டெல்லியில் கனமழைக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் 88 ஆண்டுகளுக்குப் பிறகு கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் கடந்த 1936-ம் ஆண்டில் 234 மில்லிமீட்டர் மழை பெய்தது. அதற்குப் பிறகு தற்போது ஜூன் மாதத்தில் 228 மில்லிமீட்டர் மழை டெல்லியில் பதிவாகியுள்ளது.

88 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் கனமழை பெய்துள்ளதால் டெல்லியின் முக்கிய பகுதிகள், சந்திப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், தெற்கு டெல்லியின் வசந்த்விஹார் பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் சந்தோஷ் குமார்யாதவ் (19), சந்தோஷ் (38) எனத்தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து டெல்லியில்கனமழைக்கு உயிரிழந்தோரின்எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கட்டிடம் கட்டப்பட்டு வரும் பகுதி மழை நீரால் மூழ்கியுள்ளதால் அங்குள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிதொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மழையின் காரணமாக நேற்று முன்தினம் 5 பேர் உயிரிழந்தனர். நேற்று 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மழையின் பாதிப்பு இன்னும் தொடர்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்