கொல்கத்தா: நீதித்துறையை அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பங்கேற்ற நீதித்துறை தொடர்பான மாநாட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
நீதித்துறையின் தற்கால வளர்ச்சிகள் குறித்த மாநாடு கொல்கத்தாவில் இன்று (ஜூன் 29) நடைபெற்றது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாட்டில் பேசிய மம்தா பானர்ஜி, “நீதித்துறை எங்களுக்கு மிக முக்கிய கோயில். இது, கோயில், மசூதி, குருத்வாரா போன்றது. மக்களுக்கு நீதி வழங்குவதற்கான மேலான அதிகாரம் கொண்ட அமைப்பு நீதித்துறை. இந்த நீதித்துறை மக்களுடையது, மக்களுக்கானது என்று நான் நம்புகிறேன். நீதித்துறையில் இருப்பவர்கள் அனைவரும் நாட்டுக்கும் உலகிற்குமான சொத்து. யாரையும் அவமானப்படுத்துவது எனது நோக்கமல்ல, ஆனால் நீதித்துறையில் அரசியல் சார்பு இல்லை என்பதை தயவுசெய்து பார்க்க வேண்டும். நீதித்துறை முற்றிலும் தூய்மையாகவும், நேர்மையாகவும், புனிதமாகவும் இருக்க வேண்டும். மக்கள் அதை வணங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
முன்னதாக மாநாட்டில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், “முக்கியமாக, இந்த மாநாடு சமகால நீதித்துறையின் முன்னேற்றங்கள் குறித்தும், சட்டம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் நீதியை வலுப்படுத்துவது குறித்தும் பேசுகிறது. ‘சமகாலம்’ என்ற சொல் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அது சுருக்கமாக நாம் செய்யும் வேலையைப் பற்றி பேசவில்லை. நாம் செய்யும் பணியில் நீதிபதிகளாக நாம் எதிர்கொள்ளும் சமகால சமூக சவால்களின் பின்னணியை பேசுகிறது. எனவே, சட்டத்தையும், தொழில்நுட்பத்தையும் நாம் சமூக நிலைமைகளின் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்” என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
1 day ago