அவசரநிலை பற்றிய கருத்தை தவிர்த்திருக்கலாம்: மக்களவைத் தலைவரை நேரில் சந்தித்த ராகுல் அதிருப்தி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை நேற்று சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, அவசரநிலை பற்றி அறிக்கை வெளியிட்டதற்காக அதிருப்தி தெரிவித்தார்.

மக்களவைத் தலைவராக 2-வதுமுறையாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட ஓம் பிர்லா, அவசரநிலை பிரகடனத்தின் 50-வது ஆண்டை முன்னிட்டு மக்களவையில் ஒரு அறிக்கையை வெளியிட்டாார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலையை அமல்படுத்தியது அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் என பிர்லா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திநேற்று ஓம் பிர்லாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகாபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்திசெயல்படுவார் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். இதையடுத்து, நான், ராகுல் காந்தி,இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஓம் பிர்லாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். அப்போது நாடாளுமன்ற செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம்.

மக்களவையில் பேசியபோது அவசரநிலை குறித்த கருத்தை தவிர்த்திருக்கலாம் என ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி தெரிவித்தார். அது ஒரு அரசியல் கருத்து அதைத் தவிர்த்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்