மாநிலங்களவையில் அமைச்சர்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தனது அமைச்சரவை சகாக்களை மாநிலங்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.

நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅமைச்சரவை கடந்த 9-ம் தேதிபதவியேற்றது. பிரதமரை தொடர்ந்து 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

18-வது மக்களவையின் முதல்கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதில் நேற்று முன்தினம் மக்களவை தலைவர் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவை சகாக்களை மக்களவையில் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையடுத்து மாநிலங்களவையின் 264-வது அமர்வு தொடங்கியது. இதில் உறுப்பினர்களின் கரவொலிக்கு மத்தியில் பிரதமர் மோடி தனது அமைச்சரவை சகாக்களை அவையில் அறிமுகம் செய்தார். அப்போது அவை முன்னவர் ஜே.பி.நட்டா, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜு கார்கே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஉள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.

ஜே.பி.நட்டா நியமனம்: முன்னதாக சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை மாநிலங்களவையில் அவை முன்னவராக நியமிக்க பாஜக முடிவு செய்தது. இத்தகவல் முறைப்படி அவைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாநிலங்களவையின் 264-வது அமர்வின் முதல் நாளான நேற்று, ஜே.பி.நட்டா அவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார். இதற்கு உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடி அவையில் இருந்தார்.

6 புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு: பிஹார், ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 பேர் நேற்று எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டனர்.

அவைத் தலைவர் ஜகதீப் தன்கரின் அழைப்பை தொடர்ந்து, பிஹாரை சேர்ந்த காங்கிரஸ்எம்.பி. அகிலேஷ் பிரசாத் சிங்முதலில் பதவியேற்றார். இதையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி. சர்ஃபராஸ் அகமது, பாஜக எம்.பி. பிரதீப் குமார் வர்மா ஆகியோர் பதவியேற்றனர். பிறகு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் பன்ஷிலால் குர்ஜார், மாயா நரோலியா, பாலயோகி உமேஷ்நாத் ஆகியோர் பதவியேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்