வளர்ப்பு நாய் கடித்ததில் மகன் உயிரிழப்பு: மன உளைச்சலில் தந்தை மரணம்

By என்.மகேஷ்குமார்


விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட் டினம் அருகே உள்ள பீமலியில் வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்ததில் 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவை தாங்க முடியாத தந்தையும் நேற்று உயிரிழந்துள்ளார்.

ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினம் மாவட்டம், பீமலி மண்டலம், எகுவபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்க ராவ் (55). இவர் பஸ் போக்குவரத்து ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு பார்கவ் (23) என்கிற மகன் இருந்தார். மேலும், இவர்களது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக நாய்ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்த நாய், கடந்த மாதம் பார்கவை கடித்துள்ளது.

இதனால் அவருக்கு ரேபிஸ்பரவி உயிரிழந்தார். மகனை இழந்த துக்கத்தில் தந்தை நரசிங்க ராவும் படுத்த படுக்கையாகிவிட்டார்.

இந்நிலையில், அவர் நேற்று மன உளைச்சல் காரணமாக உயிரிழந்தார். ஒரு வளர்ப்பு நாயால் அந்த வீட்டில் இருவர் உயிரிழந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்து கிராமத்தினர் நரசிங்க ராவின் இறுதிச் சடங்குக்கு வந்து துக்கம் விசாரித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

21 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்