அமராவதி: ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் 13-ம் தேதி 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவைதொகுதிகளுக்கு ஒரே நாளில் வாக்குப்பதிவு நடந்தது. அப்போது மாசர்லா சட்டப்பேரவையின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் பால்வாய்கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குள் புகுந்து அங்கிருந்த வாக்கு இயந்திரத்தை தரையில் போட்டு உடைத்து ஒரு ரவுடி போல் நடந்து கொண்டார்.
இவை அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து, மறுநாள் 14-ம் தேதி பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி, அவரது தம்பி வெங்கட்ராமி ரெட்டி மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் காரம்பூடி எனும் ஊரில் அராஜகம் செய்தனர். பொதுமக்கள் மீதுசோடா பாட்டில் வீச்சு, கல்வீச்சில் ஈடுபட்டனர். அப்போது தடுக்கவந்த இன்ஸ்பெக்டர் நாராயண சாமியையும் இவர்கள் தாக்கினர்.
இதனை தொடர்ந்து போலீஸார் கண்ணீர் புகை வீசியும், தடியடி நடத்தியும் இவர்களை கலைத்தனர். இதனை தொடர்ந்து இவர்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. இதில் 4 கொலை மிரட்டல் வழக்குகள் ஆகும்.
இந்நிலையில், இவர்கள் அனைவரும் தலைமறைவாயினர். ஆனால், பின்னெல்லி ராம கிருஷ்ணா ரெட்டி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, முன் ஜாமீன் பெற்றனர். நீதிமன்றமும் அவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
» பகலில் கடிக்கும் கொசுக்களால் புனே மருத்துவர், மகளுக்கு ஜிகா வைரஸ் தொற்று
» நான் எழுதிய கட்டுரையை ரசித்து படித்தார் அப்துல் கலாம்: நினைவு கூர்ந்தார் சுதா மூர்த்தி எம்.பி.
இந்நிலையில், நேற்று மீண்டும் ஜாமீன் குறித்த வழக்கு ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வாக்கு இயந்திரம் உடைத்த வழக்கு உட்பட பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டி, அவரின் தம்பி மற்றும் ஆதரவாளர்களின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்வதாக நேற்று மதியம் உத்தரவு வழங்கியது.
இதனை தொடர்ந்து பின்னெல்லி ராமகிருஷ்ணா ரெட்டியை போலீஸார் கைது செய்து, மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் நேற்று மாலை குண்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இவரது தம்பி வெங்கட்ராமி ரெட்டி மற்றும் சிலர் தலைமறைவாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
18 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago