புதுடெல்லி: இண்டியா கூட்டணி கட்சியினரின் போராட்டத்தால், கடந்த 3 மாதத்தில், 5,000 அரசியல் சாசன பாக்கெட் புத்தகங்கள் விற்பனையாகிஉள்ளன.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் உத்தர பிரதேசம் ஃபைசாபாத்தொகுதி பாஜக வேட்பாளர் லல்லு சிங் பேசுகையில்,‘‘இந்திய அரசியல் சாசனத்தை மாற்ற 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை” என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இவரது கருத்தைபாஜகவின் திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறி வந்தனர்.
ஆனால், பாஜக தலைவர்கள் இந்த கருத்தை மறுத்து வந்தனர்.ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தில், அரசியல் சாசனத்தின் பாக்கெட் புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு, அரசியல் சாசனத்தை பாஜக மாற்ற அனுமதிக்க கூடாது” என பேசினார்.
தற்போது 18-வது மக்களவை தொடங்கிய பிறகும், இண்டியா கூட்டணியினர் தங்கள் கைகளில் அரசியல் சாசனத்தின் பாக்கெட் புத்தகத்தை கையில் வைத்துக் கொண்டு, பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எம்.பி.யாக பதவி ஏற்கும்போது, இந்தபுத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு பதவியேற்றனர்.
» ஸ்ரீநகர் ‘உலக கைவினை நகரம்’ - உலக கைவினை கழகம் அங்கீகாரம்
» தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா மறுப்பு: காவிரி மேலாண்மை ஆணையம் முடிவெடுப்பதில் தாமதம்
இண்டியா கூட்டணியினர் நடத்தும் இந்த போராட்டத்தால் அரசியல் சாசன பாக்கெட் புத்தகத்தின் விற்பனை அதிகரித்துள்ளதாக அதை வெளியிட்ட லக்னோவைச் சேர்ந்த ஈஸ்டர்ன் புக் கம்பெனி (இபிசி) தெரிவித்துள்ளது. இந்த பாக்கெட் புத்தகம் கடந்த 2009-ம்ஆண்டு முத முதலில் அச்சிடப்பட்டது. அதன்பின் 16 பதிப்புகள் வெளியாகியுள்ளன. கடந்த 2023-ம் ஆண்டில் சுமார் 5,000 புத்தகங்கள் விற்றன.
ஆனால், இண்டியா கூட்டணியினர் அரசியல் சாசன பாக்கெட்புத்தகத்துடன் நடத்தும் போராட்டத்தால், கடந்த 3 மாதத்தில் மட்டும் 5,000 புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன என இபிசி வெளியீட்டாளர் சுமித் மாலிக் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago