புதுடெல்லி: கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 25-ம்தேதி இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவசரநிலைபிறப்பிக்கப்பட்டு நேற்றுடன் 50 ஆண்டுகள் ஆகிறது.
அவசரநிலையின் கதை ஜூன் 25, 1975 அன்று தொடங்கவில்லை. அதற்கு முன்னதாகவே, 1974-ம் ஆண்டு குஜராத்தில் ‘நவநிர்மான் அந்தோலன்’ என்ற பெயரில் காங்கிரஸ் அரசின் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாணவர்கள் தலைமையில் மாபெரும் போராட்டம் நடந்தது. இதில் ஏற்பட்ட மாணவர்களின் எழுச்சியை நரேந்திர மோடி உணர்ந்தார். அப்போது அவருக்கு வயது 25.
அப்போது ஆர்எஸ்எஸ் இளம் பிரச்சாரகராக இருந்த மோடி, இளைஞர்கள் அமைப்பான அகிலபாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்புக்கு (ஏபிவிபி) அனுப்பப்பட்டார். இளைஞர்களின் இயக்கத்தை அவர் ஆதரித்தார். நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, அதற்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டார். கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த போதிலும், மோடியும் பிற தன்னார்வலர்களும் கூட்டங்களை நடத்தி அரசின் அடக்குமுறைகளை மக்களிடையே பரப்பினர்.
நாத் ஜக்டா மற்றும் வசந்த்கஜேந்திரகட்கர் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர்களுடன் இணைந்து, அரசின் அடக்குமுறை தொடர்பான செய்திகளை பரப்புவதற்கான புது வழிகளைக் கண்டறிந்தார். குறிப்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டதையடுத்து, குஜராத் லோக் சங்கர்ஷ் சமிதி நிறுவப்பட்டது. துடிப்பான செயல்பாட்டால் 25 வயதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக மோடி உயர்ந்தார்.
» ஸ்ரீநகர் ‘உலக கைவினை நகரம்’ - உலக கைவினை கழகம் அங்கீகாரம்
» இண்டியா கூட்டணி போராட்டத்தால் அரசியல் சாசன புத்தக விற்பனை அதிகரிப்பு
மிசா சட்டத்தின் கீழ் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும், காங்கிரஸ் அரசுக்கு எதிரான புரட்சியை சுட்டிக்காட்டுவதில் அவருடைய கட்டுரைகளும் கடிதப் போக்குவரத்தும் முக்கிய பங்கு வகித்தன. அரசின் அடக்குமுறை தொடர்பான செய்திக் கட்டுரைகள் சர்வதேச ஊடகங்களில் வெளியிட முயற்சிகளை மேற்கொண்டார்.
சர்வதேச ஊடகங்களில் இந்திய அவசரநிலைக்கு எதிரான கட்டுரைகள் வெளியான செய்தித்தாள்களின் புகைப்பட நகல்களை தனது வெளிநாட்டு நண்பர்களின் உதவியுடன் பெற்றார். இந்த பிரதிகளை சிறையில் உள்ள தலைவர்களுக்கு வழங்க மோடி ஏற்பாடு செய்தார். போலீஸார் மற்றும் அதிகாரிகளின் கண்களிலிருந்து தப்புவதற்காக, சாமியார், சீக்கியர் உள்ளிட்ட பல்வேறு மாறுவேடங்களை தரித்தார்.
கடந்த 1977-ம் ஆண்டு அவசரநிலை திரும்ப பெறப்பட்ட பிறகு,மோடியின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் கிடைத்தது. தெற்கு மற்றும் மத்திய குஜராத்தின் சம்பாக் பிரச்சாரகராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 1978-ல் நரேந்திர மோடி ‘சங்கர்ஷ் மா குஜராத்’ என்ற பெயரில் தனது முதல் நூலை எழுதினார். குஜராத் முன்னாள் முதல்வர் பாபுபாய் ஜஸ்பாய் படேல் வெளியிட்ட இந்த புத்தகம் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றது. பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற அவசரநிலை காலம் தனக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்கியது என பெருமையுடன் நினைவுகூர்கிறார் நரேந்திர மோடி.
முக்கிய செய்திகள்
இந்தியா
59 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago