பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருளுக்கு 14 நாட்களில் 15 இளைஞர்கள் உயிரிழப்பு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பஞ்சாபில் போதைப் பொருளுக்கு கடந்த 14 நாட்களில் 15 இளைஞர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக 10,000 போலீஸாரை இடமாற்றம் செய்ய முதல்வர் பக்வந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாபில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பாலிவுட்டில் ‘உடுதா பஞ்சாப்’ எனும் பெயரில் திரைப்படமும் வெளியாகி பிரபலமானது. பஞ்சாபில் இளம் சமூகத்தினர் மத்தியில் போதைப் பொருள் பயன்பாடு மிக வேகமாகப் பரவியுள்ளது. இதற்கு பஞ்சாப் எல்லைக்குள் பாகிஸ்தான் தீவிரவாதிகள் டிரோன்கள் மூலம் போதைப் பொருளை வீசுவது காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த சூழலில் பஞ்சாபில் கடந்த 14 நாட்களில் அளவுக்கு மீறி போதைப் பொருள் உட்கொண்ட 15 இளைஞர்கள் உயிரிழந்தனர்.

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக ஆளும் ஆம் ஆத்மி அரசின் நடவடிக்கைகள் பலன் அளிக்காத நிலை உள்ளது. இதற்குமுன் காங்கிரஸ் ஆட்சி மற்றும் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி ஆட்சியிலும் இதனை தடுக்க முடியவில்லை எனப் புகார்கள் உள்ளன.

பஞ்சாபிலிருந்து பிற மாநிலங்களுக்கும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. இதன் பின்னணியில் போதைப் பொருள் கும்பலுடன் பஞ்சாப் போலீஸாருக்கு நட்புறவு இருப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே சுமார் 10 ஆயிரம் போலீஸாரை உடனே இடமாற்றம் செய்ய முதல்வர் பக்வந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து போதைப்பொருள் பழக்கத்தால் உயிரிழந்த குருதாஸ்பூர் இளைஞரின் தந்தை ஆர்.கே.மல்ஹோத்ரா கூறும்போது, “எனது மகனின் நிலை இனி பஞ்சாபில் எவருக்கும் வரக்கூடாது. போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து காவல் துறையினருக்கு வாரந்தோறும் லஞ்சம் கிடைக்கிறது. எனவே இவர்கள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை அவசியம்” என்றார்.

பஞ்சாப் முன்னாள் டிஜிபி ஷிஷாகாந்த் கூறும்போது, “காவல்துறை சட்டப்படி ஒருவர் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் ஒரேஇடத்தில் பணியாற்றுவதை தடுத்தாலே பெரும்பாலான குற்றங்களை தடுத்து விடலாம். முதல்வரின் இடமாற்ற உத்தரவு அவசரமுடிவாகத் தெரிகிறது. போதைப்பொருள் கடத்தலுக்கு போலீஸார்தான் காரணம் என்பதுபோல் இதுஉள்ளது. இந்த கடத்தல் விவகாரத்தில் போலீஸாருடன் அரசியல்வாதிகள் மற்றும் பொதுசமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது. அவர்களை கைது செய்யும் வரை போதைப் பொருள் கடத்தலை ஒழிக்க முடியாது” என்றார்.

இடமாற்ற உத்தரவுக்கு பிறகு பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தும் சுமார் 9,000 முக்கிய நபர்களின்பட்டியலை ஆம் ஆத்மி அரசு தயாரித்துள்ளது. மேலும் இவர்களை பிடிக்க ‘ஆப்ரேஷன் ஈகிள்’ என்ற நடவடிக்கையை காவல்துறை தொடங்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்