பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘மஹா நட்டி’ (மகா நடிகை) என்ற பெயரிலும் திரைப்படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. இந்த திரைப்படக் குழுவினர் அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தனர். அப்போது திரைப்படக் குழுவை பாராட்டி நாயுடு பேசியதாவது:
சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்ந்து காட்டியுள்ளார். கஷ்டத்திலும் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்ட சாவித்திரியின் வாழ்க்கை நமக்கு பாடமாகும்.
அமராவதி அருகில்தான் சாவித்திரியின் சொந்த ஊர் என்பது பலருக்குத் தெரியாது. சிறந்த நடிகர்கள் என்டிஆர், நாகேஸ்வர ராவ், சிவாஜி உள்ளிட்டோருக்கு சமமான நடிகை சாவித்திரி. இரண்டு ஆண்டு கஷ்டப்பட்டு சிறந்த படத்தை தந்த இயக்குநர், தயாரிப்பாளர், திரைப்பட குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago