கேஜ்ரிவாலின் ஜாமீனை நிறுத்தி வைத்தது டெல்லி ஐகோர்ட் - அமலாக்கத் துறை முன்வைத்த வாதம் என்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்புடைய பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை, டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது நேற்று (ஜூன் 20) உத்தரவு பிறப்பித்த விசாரணை நீதிமன்றம், கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் (ED) சார்பில் அவசர மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, "விசாரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தவறானது. முழுமையான வாதத்தை முன்வைக்க எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய எனக்கு 2-3 நாட்கள் நேரம் வழங்கப்படவில்லை. விசாரணை நீதிமன்றம் அரை மணி நேரத்தில் தீர்ப்பை வழங்க விரும்புவதாக கூறியது. வழக்கை வாதிடுவதற்கு எங்களுக்கு முழு வாய்ப்பை வழங்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டை மிகவும் கவனமாக முன்வைக்கிறேன்.

விசாரணை நீதிமன்றம் (நேற்று) இரவு 8 மணியளவில் ஜாமீன் வழங்கும் உத்தரவை அறிவித்தது. உத்தரவின் நகல் இன்னும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. உத்தரவை நிறைவேற்றிய பிறகும், உயர் நீதிமன்றங்களை அணுகுவதற்கு 48 மணி நேரத்துக்கு உத்தரவை நிறுத்தி வைக்குமாறு அமலாக்கத் துறை வழக்கறிஞர்கள் விசாரணை நீதிமன்றத்தை வலியுறுத்தியபோதும், எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும்" என்று வாதிட்டார்.

கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் விக்ரம் சவுத்ரி ஆகியோர், அமலாக்கத் துறை வழக்கறிஞர் கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினர். தேர்தல் பிரச்சாரத்துக்காக கேஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் விடுவித்ததை அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார். அதேநேரத்தில், இந்த வழக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அதன் முடிவில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்