பதவி நீக்கப்படும் சூழ்நிலை எனக்கும் வந்தது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு உருக்கம்

By எம்.சண்முகம்

‘நாடாளுமன்ற தீர்மானம் மூலம் பதவி நீக்கப்படும் சூழ்நிலை எனக்கும் வந்தது’ என்று நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் மார்கண்டேய கட்ஜு. இவர் ‘விதர் இண்டியன் ஜுடிசியரி?’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். புளூம்ஸ்பரி நிறுவனம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தில் நீதித் துறையின் தற்போதைய நிலை, சவால்கள் உள்ளிட்டவற்றை விமர்சித்துள்ளார். பணிமூப்பு அடிப்படையில் மூத்த நீதிபதியை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும் நடைமுறை குறைபாடு உடையது. தீர்ப்புகளின் அடிப்படையில் திறமையான நீதிபதியை கண்டறிந்து அவர் பணிமூப்பில் குறைந்தவராக இருந்தாலும் அவரை தலைமை நீதிபதியாக நியமிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு), இந்திய பத்திரிகைகள் கவுன்சில் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர் கட்ஜு. இவர் மேலும் கூறும்போது, என்னையும் நாடாளுமன்ற தீர்மானம் மூலம் பதவி நீக்க முயற்சிகள் நடந்தன என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது புத்தகத்தில் குறிப்பிடும்போது, ‘நான் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக 91-ம் ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்டேன். 92-ம் ஆண்டு என்னிடம் ஒரு வழக்கு வந்தது. காஸியாபாத் மாவட்ட பள்ளியில் நரேஷ் சந்த் என்பவர் ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் ஓபிசி பிரிவைச் சேர்ந்த நரேஷ் சந்த் நியமிக்கப்பட்டதால் பள்ளிகளுக்கான ஆய்வாளர் அவரது நியமனத்தை ஏற்க மறுத்து பதவி நீக்கினார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நரேஷ் சந்த் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு என்னிடம் வந்தபோது, ஆய்வாளர் உத்தரவை ரத்து செய்து நரேஷ் சந்துக்கு மீண்டும் பதவி வழங்க உத்தரவிட்டேன்.

‘இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக மாணவர்கள் தரப்பில் எனது தீர்ப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது. தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் என்னை பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர முடிவு செய்ததாக பத்திரிகைகள் மூலம் அறிந்தேன். எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன.

உயர் நீதிமன்றம், எனது வீடு ஆகிய இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நான் வெளியில் நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். இறுதியில் அந்த விவகாரம் தானாகவே அடங்கிவிட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை தீபக் மிஸ்ராவுக்கு எதிராக சமீபத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வர முயற்சி எடுத்த நிலையில், நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவரது புத்தகத்தில் தெரிவித்துள்ள தகவல் நீதித்துறையில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்