விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முந்தைய ஜெகன் அரசால் கட்டப்பட்ட ரகசிய மாளிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிதாக பதவியேற்றுள்ள தெலுங்கு தேசம் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
விசாகப்பட்டினத்தில் கடலை பார்த்தவாறு கட்டப்பட்ட இந்த ரகசிய மாளிகை ஜெகனின் முகாம் அலுவலமாக மாற்றுவதற்காக தயாராகி வந்துள்ளது என தெலுங்கு தேசம் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாளிகையில் நிறுவப்பட்டுள்ள பாத் டப்பின் விலை மட்டும் ரூ.26 லட்சம் என்று தெலுங்கு தேசம் தரப்பில் சொல்லப்படுகிறது. அந்த அலுவலகமும், இடமும் அரசாங்கத்துக்கு உரியது. அரசாங்க இடத்தில் கட்டப்பட்டுள்ள இந்த மாளிகையின் மதிப்பு சுமார் ரூ.500 கோடி என்று சொல்லப்படுகிறது.
திங்கள்கிழமை தெலுங்கு தேசம் எம்எல்ஏ கண்டா ஸ்ரீனிவாஸ் இந்த மாளிகையை பார்வையிட்ட பின் பேசுகையில், "ஜெகன் அரசு இதனை முகாம் அலுவலமாக மாற்ற ரகசியமாக கட்டியுள்ளது. டெண்டர் கோரப்பட்டது, மாளிகையை கட்டியது அனைத்தும் ஜெகன் ஆதரவாளர்களே. இத்தனை ஆடம்பரமாக கட்ட வேண்டிய தேவை என்ன. ருஷிகொண்டா மாளிகை 9.88 ஏக்கர் பரப்பளவில் கடல் நோக்கி அமைந்துள்ளது. ஆடம்பர வசதிகள், உயர்தர பர்னிஷிங், பளபளக்கும் விளக்குகள் ஆகியவை பொது நிதியை பயன்படுத்தி செய்யப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு சதாம் உசேன் அரண்மனை போல் உள்ளது.
இதன் கட்டுமான செலவுகள், ஒப்பந்த விவரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்துள்ளன. இந்த மாளிகையை கட்டுவதற்காக ருஷிகொண்டாவில் ஆண்டுக்கு ரூ.8 கோடி வரை வருமானம் ஈட்டித் தந்த அரசின் சுற்றுலா ரிசார்ட்டுகள் இடிக்கப்பட்டுள்ளன. நல்லவேளையாக கடவுள் இந்த முறை ஆட்சியை அவர்களுக்கு கொடுக்கவில்லை" என்று தெரிவித்தார்.
» ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: 7 கேள்விகளுடன் காங். வலியுறுத்தல்
» மூளை ஆராய்ச்சிக்காக சென்னை ஐஐடி-க்கு ரூ.41 கோடி நன்கொடை அளித்த முன்னாள் மாணவர்
இதற்கிடையே, தெலுங்கு தேசம் கட்சி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த மாளிகையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. மலையின் அடிவாரத்தில் கடலை பார்க்க ஏதுவாக இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது.
மாளிகை தொடர்பாக பேசியுள்ள முன்னாள் தொழில்துறை அமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அமர்நாத், "விசாகப்பட்டினத்தை தலைநகராக அறிவித்தால் பிரதமர், குடியரசுத் தலைவர் போன்ற விருந்தினர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இது கட்டப்பட்டது. இது முதல்வர் முகாம் அலுவலகம் அல்ல. அது அரசின் சொத்து. எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல" என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
இந்தியா
9 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago