பெங்களூரு: தங்கள் வீட்டின் முன்னாள் பணிப்பெண்ணை கடத்திய வழக்கில் பவானி ரேவண்ணாவுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது கர்நாடக நீதிமன்றம். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பவானி ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றச்சாட்டு உள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்தியதாக பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா, தாயார் பவானி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பவானி ரேவண்ணா தலைமறைவானார். மேலும் ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவர் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு ஆஜரானார்.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கடந்த 14-ம் தேதி கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். அதனடிப்படையில் தற்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம்.
கர்நாடகாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000 வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெர்மனிக்கு தப்பியோடிய அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago