குவாஹாட்டி: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாசர்மா எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரின் மின்கட்டணம் மக்களின் வரிப் பணத்தில் செலுத்தப்படுகிறது. இத்தகைய விஐபி கலாச்சார விதிகளுக்கு முடிவு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னுதாரணமாக, நானும் தலைமைச் செயலாளரும் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் எங்கள் மின் கட்டணத்தை நாங்களே செலுத்த உள்ளோம். இதுபோல, ஜூலை மாதம் முதல் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களும் மின் கட்டணத்தை தாங்களே செலுத்த வேண்டும்.
மேலும் மின்சாரத்தை சேமிக்கும் வகையில், முதல்வர், உள்துறை மற்றும் நிதித் துறை அலுவலகங்களைத் தவிர அனைத்து அரசு அலுவலகங்களிலும் இரவு 8 மணிக்கு தானாகவே மின்சாரத்தை துண்டிக்கும் திட்டத்தை தொடங்கி உள்ளோம்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் படிப்படியாக சோலார் மின்சாரத்தை பயன்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதன் தொடக்கமாக மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட் டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago