குவாஹாட்டி: சிக்கிமில் கனமழை, நிலச்சரிவின் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிக்கிமுக்கு வந்த 2 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கனமழையின் காரணமாக சிக்கித் தவிக்கின்றனர்.
இமயமலை அடிவாரத்தில் உள்ள சிக்கிம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான இடங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கனமழை, நிலச்சரிவால் இதுவரை சிக்கிமில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சிக்கிம் எல்லையை ஒட்டி அமைந்துள்ள நேபாள நாட்டின் தாப்ளேஜங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கனமழை குறித்து மங்கன் மாவட்ட ஆட்சியர் ஹேம்குமார் சேத்ரி கூறும்போது, “மாவட்டத்தின் பல இடங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் மழையால் சிக்கி பரிதவித்தனர். அவர்களை அங்கிருந்து மீட்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
40 mins ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago