உபரி நீர் இல்லை என உச்ச நீதிமன்றத்திடம் இமாச்சல் கைவிரிப்பு @ டெல்லி தண்ணீர் பிரச்சினை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய தலைநகரில் தற்போது நிலவி வரும் தண்ணீர் பிரச்சினைகளுக்கு மத்தியில், தனது முந்தைய அறிக்கையை திரும்பப் பெற்றுள்ள இமாச்சலப் பிரதேச அரசு, தங்களிடம் 136 கன அடி உபரி நீர் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பெறுவதற்காக மேல் யமுனை நதிநீர் வாரியத்திடம் (Upper Yamuna River Board) முறையிடுமாறு டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இமாச்சலப் பிரதேச அரசு வழங்கிய உபரி நீரை டெல்லி திறந்து விட ஹரியாணா அரசுக்கு உத்தரவிடக் கோரிய டெல்லி அரசின் மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. இம்மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் பிரசன்ன பி வரலே அடங்கிய விடுமுறைக் கால அமர்வு விசாரித்தது. அந்த அமர்வு மனிதாபிமான அடிப்படையில் தேசிய தலைநகருக்கு தண்ணீர் வழக்குமாறு மேல் யமுனை நதிநீர் வாரியத்தில் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு டெல்லி அரசிடம் தெரிவித்தது.

மேலும், மாநிலங்களுக்கு இடையில் யமுனை நதி நீரினை பகிர்ந்து கொள்வது என்பது மிகவும் சிக்கலான மற்றும் உணர்வுபூர்வமான விஷயம். இடைக்கால அடிப்படையில் கூட முடிவெடுக்கும் அளவுக்கு நீதிமன்றத்துக்கு தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லை.

மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் வழங்கக் கோரி யுஒய்ஆர்பி-யிடம் விண்ணப்பிக்குமாறு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறகெனவே இத்தகைய விண்ணப்பம் அளிக்கப்படவில்லை என்றால், இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வாரியம் நாளை கூடி இந்த விஷயத்தில் விரைவாக முடிவெடுக்கும்" என்று தெரிவித்தது.

இமாச்சல அரசின் முந்தைய அறிக்கை: மேல் யமுனை நதிநீர் வாரியம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இமாச்சலப் பிரதேச அரசு, ஹரியாணாவுக்கு அனுப்பிய கடிதத்தைக் குறிப்பிட்டிருந்தது. அதில், மலை மாநிலம் பயன்படுத்தாமல் உள்ள உபரி நீரை ஏற்கனவே தடையில்லாமல் ஹரியாணாவில் உள்ள ஹத்னிகுண்டு தடுப்பணைக்கு அனுப்பி வருகிறது. ஹரியாணா அரசு அதனை டெல்லிக்கு திறக்க வேண்டும் என்ற தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, உச்ச நீதின்ற உத்தரவு படி 137 கன அடி உபரி நீர் எதுவும் இமாச்சலப்பிரதேசத்தில் சேமிப்பில் இல்லை எனவே டெல்லிக்கு இமாச்சலப் பிரதேசம் வெளியிடும் உபரி நீரை ஹரியாணாவும் குறிப்பிட்டது போல இரண்டு வழிகளில் மட்டுமே கண்டறியமுடியும் என்று தனது பிரமாண பத்திரத்தில் இமாச்சலப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, தேசிய தலைநகரில் நிலவிவரும் தற்போதைய தண்ணீர் பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றத்தில் டெல்லி அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், "தண்ணீர் டேங்க் மாஃபியாக்கள் ஹரியாணா பகுதிக்குள் இருந்தே டெல்லிக்குள் வருகிறார்கள். அதிகார வரம்பு காரணமாக தண்ணீர் டேங் மாஃபியாகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.என்றாலும் தண்ணீர் பிரச்சினைக்கு டெல்லி அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது" என்று தெரிவித்திருந்தது.

டெல்லியில் தற்போது கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதற்கு ஹரியாணா அரசு டெல்லிக்கான பங்கு நீரை வழங்கவில்லை என்று டெல்லி அரசு குற்றம்சாட்டி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்