விஜயவாடா: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கலந்துகொண்டார். நேற்று காலை சிரஞ்சீவியும், ரஜினி காந்த் தம்பதியும் ஒன்றாக விழா மேடைக்கு வந்தனர். அதன் பின்னர், மேடையில் இருந்த சிறப்பு அழைப்பாளர்களான முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு, முன்னாள் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரை ரஜினி சந்தித்து பேசினார்.
இவர்களை தொடர்ந்து மேடைக்கு வந்த மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ஜேபி நட்டா ஆகியோரும் ரஜினியுடன் கை குலுக்கி பேசினர். முதல்வராக பதவியேற்ற பிறகு ரஜினியை பார்த்ததும் சந்திரபாபு நாயுடு அவரிடம் சென்று கட்டியணைத்து நன்றி தெரிவித்தார். பதிலுக்கு ரஜினியும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர்கள் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோர் ரஜினி அருகில் அமர்ந்திருந்தனர். சிரஞ்சீவியும் ரஜினியும் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்தனர். கடைசியாக விழா முடிந்த நிலையில், பிரதமர் மோடியும் ரஜினியை சந்தித்து கை குலுக்கி பேசினார். ஒரே மேடையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோரை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago