நிதி மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் பதவி விலகினார்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நிதி மோசடி வழக்கில் கைதான ஜார்க்கண்ட் காங்கிரஸ் அமைச்சர் ஆலம்கிர் ஆலம், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில அமைச்சராகவும், சட்டபேரவை கட்சி தலைவராகவும் இருந்தவர் ஆலம்கிர் ஆலம். இவரிடம் பஞ்சாயத்து ராஜ், ஊரக மேம்பாடு மற்றும் ஊரக பணிகள், சட்டப்பேரவை விவகாரத்துறை ஆகியவை இருந்தன.

இந்நிலையில் இவரது உதவியாளருக்கு சொந்தமான இடத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.32 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து நிதிமோசடி வழக்கில் அமைச்சர் ஆலம்கிர் ஆலத்தை அமலாக்கத்துறை கடந்த மாதம் 15-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தது. கைது செய்யப்பட்டு 3 வாரங்கள் ஆன நிலையில் சிறை அதிகாரிகள் மூலமாக தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் சம்பை சோரன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு ஆலம்கிர் ஆலம் வழங்கினார்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அவர் அனுப்பிய கடிதத் தில், ‘‘ஜார்க்கண்ட் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய கட்சி தலைமைக்கு நான் விசுவாசமாக இருப்பேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE