அசைவ உணவுக்கு செலவு செய்வதில் கேரளா முதலிடம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை கீழ்செயல்படும் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்எஸ்எஸ்ஓ) நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது.

ஒரு வீட்டில் உணவுக்காக செலவிடப்படும் செலவுத்தொகையை கணக்கிடவும், மக்களின் உணவுவிருப்பங்களை முன்னிலைப்படுத்தவும் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி கேரள குடும்பங்களில் அசைவ உணவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அசைவ உணவுக்காக அதிகம்செலவிடுபவர்கள் பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த 2022-23-ம் ஆண்டில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி கேரள மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களது வருமானத்தில் இருந்து அசைவ உணவுக்காக 23.5 சதவீதம் செலவழிக்கின்றனர். அதேநேரத்தில் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் தங்களது வருவாயிலிருந்து 19.8 சதவீதத் தொகையை அசைவ உணவுகளுக்காக செலவழிக்கின்றனர். இந்தப் பட்டியலில்கேரளா முதலிடம் பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் 2-வது இடத்தை அசாம் மாநிலம் பெற்றுள்ளது. உணவுகளுக்காக செலவிடும்தொகையில் 20 சதவீத தொகையை அசைவ உணவுகளுக்காக அசாம் மாநில மக்கள் செலவிடுகின்றனர்.

இந்தப் பட்டியலில் மேற்கு வங்க மாநில மக்கள் 18.9 சதவீதத் தொகையை செலவழித்து 3-வது இடத்தைப் பெற்றுள்ளனர். 4-வது இடத்தை ஆந்திராவும், 5-வது இடத்தை தெலங்கானாவும் பிடித்துள்ளன.

ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரதேச மாநில மக்கள் பால், பால் பொருட்களுக்காக அதிகம் செலவிடுகின்றனர் என்று என்எஸ்எஸ்ஓ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்