காங்டாக்: சிக்கிம் முதல்வராக சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங்தமாங் (56) தொடர்ந்து 2-வது முறையாக நேற்று பதவியேற்றார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலும் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 32 தொகுதிகளில் பதிவானவாக்குகள் கடந்த ஜூன் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் ஆளும் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) 31இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி ஓரிடத்தில் மட்டுமே வென்றது. இதையடுத்து, சிக்கிம்முதல்வராக பிரேம் சிங் தமாங் தொடர்ந்து இரண்டாவது முறையாக நேற்று பதவியேற்றார். காங்டாக் பல்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பிரேம் சிங் தமாங் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
முதல்வர் பிரேம் சிங் தமாங்கூறுகையில், “தண்ணீர், மின்சாரம், சாலைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
49 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago