விவசாயிகளுக்கு நிதி: 3-வது முறையாக பிரதமரான மோடியின் முதல் கையெழுத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடி, இன்று (திங்கட்கிழமை) தனது அலுவலகத்தில் விவசாயிகள் நலன் சார்ந்த திட்டம் தொடர்பான கோப்பில் தனது முதல் கையொப்பத்தை இட்டுள்ளார். 9.3 கோடி விவசாயிகள் பயன் அடையும் வகையில் ரூ.20,000 கோடி விடுவிக்கும் கோப்பில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.

முன்னதாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அன்று அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மொத்தம் 72 பேர் நேற்றைய தினம் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். தேர்தலில் 240 இடங்களில் வென்ற பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த முறை ஆட்சி அமைத்து உள்ளது.

முதல் கையெழுத்து: பிரதமர் மோடி இன்று தனது அலுவலகத்துக்கு சென்றதும் ‘பி.எம் கிசான் நிதி’ எனப்படும் விவசாயகள் நலன் சார்ந்த திட்டத்தில் முதலாவதாக கையொப்பமிட்டுள்ளார்.

“இதன் மூலம் மொத்தம் 9.3 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள். ரூ.20,000 கோடி இதில் விநியோகம் செய்யப்படும். வேளாண் மக்களின் நலனுக்காக எங்களது அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்படும். அந்த வகையில் அது சார்ந்த கோப்பில் முதல் கையெழுத்திடுவது தான் சரியாக இருக்கும். வரும் நாட்களில் வேளாண் மக்களுக்காகவும், வேளாண் துறை சார்ந்தும் கூடுதலாக பணியாற்ற உள்ளோம்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார். முதல் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை பிரதமர் இல்லத்தில் நடைபெறும் என தகவல். அதில் அமைச்சர்களுக்கான இலாகா குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படும். அதில் இரு அவைகளிலும் பிரதமர் மோடி தனது அரசின் நோக்கம் மற்றும் முன்னுரிமை கொடுக்க உள்ள விவகாரங்களை குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவஇல், 140 கோடி இந்திய மக்களுக்கு சேவையாற்ற தான் தயாராக உள்ளதாகவும். இந்தியாவை புதிய வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் வகையில் தனது அமைச்சரவை செயல்படும் என்றும். இளமை மற்றும் அனுபவம் கலந்த வகையில் அமைச்சரவை சகாக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்