உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் மோடிக்கு ஆதரவளிக்க விருப்பம்

By செய்திப்பிரிவு

மும்பை: மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 7 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 9 இடங்களிலும் வெற்றிபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஷிண்டேகட்சி மத்திய அமைச்சரவையில்இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், ஷிண்டே கட்சியைச் சேர்ந்த எம்.பி. நரேஷ் மாஸ்கே நேற்று முன்தினம் கூறும்போது, “உத்தவ் அணியைச் சேர்ந்த2 எம்.பி.க்கள் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை தொடர்புகொண்டு பேசினர். அப்போது, இண்டியா கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என கருதியதாகவும் அது நடக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தங்கள் தொகுதியின் மேம்பாட்டுக்காக பிரதமர் மோடிக்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர். அதேநேரம், அவ்வாறு செய்தால் தகுதிநீக்கம் செய்யப்படுவோம் எனகவலை தெரிவித்தனர். மேலும் தகுதிநீக்கத்தை தவிர்க்க மேலும்4 எம்.பி.க்களின் ஆதரவை திரட்டிக்கொண்டு பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்” என்றார்.

இதுகுறித்து உத்தவ் அணியைசேர்ந்த மூத்த தலைவர் சுஷ்மா அந்தாரே கூறும்போது, “நரேஷ் மாஸ்கே கூறியதில் உண்மை இல்லை. தனது கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதாக காட்டிக் கொள்வதற்காக அவர் இதுபோன்ற தகவலை கூறியுள்ளார். எம்.பி.யாக உள்ள அவர்இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது. அவர் கூறுவது உண்மையாக இருந்தால், தொடர்பு கொண்டு பேசியவர்களின் பெயரைதெரிவிக்க வேண்டும். மத்திய அமைச்சரவையில் தனக்கு இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் இதுபோன்று கூறுகிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்